உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீர் குழாய் குழி: மாற்று வழியில் பஸ்

குடிநீர் குழாய் குழி: மாற்று வழியில் பஸ்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய குழியால் சாலை சேதமடைந்தது. இதனால் நெடுங்குளம் பஸ்கள் மாற்று வழியில் இயக்கப்படுவதால் கிராம மக்கள், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். சோழவந்தான் அருகே நெடுங்குளத்திற்கு பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து துவரிமான் வழியாக தினமும் 4 முறை பஸ்கள் வந்து செல்லும். தச்சம்பத்து, நெடுங்குளம் பிரிவு வரை 1.5 கி.மீ., துாரத்திற்கு மதுரை மாநகராட்சி குடிநீருக்கான ராட்சத குழாய்கள் கிராம சாலை ஓரத்தில் பதிக்கப்பட்டுள்ளது. குழிகள் மூடப்பட்டுள்ள பகுதிகளில் மண் உள்வாங்கி வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படுகிறது. இதனால் பஸ்கள் நகரி வழியாக நெடுங்குளம் வந்து செல்கிறது. சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மாணவிகள் தச்சம்பத்து வரை நடந்து செல்கின்றனர். இந்த ரோட்டில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கும் டூவீலர்களும் விபத்தில் சிக்குகின்றன. விவசாயம், தொழிற்சாலை பணிகளும் பாதித்துள்ளன. எனவே இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை