உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்னொளி வாலிபால் போட்டி

மின்னொளி வாலிபால் போட்டி

மதுரை : மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையிலான காமராஜ் நினைவு மின்னொளி வாலிபால் போட்டி நடக்கிறது.துவக்க விழாவில் உதவி பேராசிரியர் மணிமாறன் வரவேற்றார். செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார். முதல்வர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். யாதவா கல்லுாரி செயலாளர் கண்ணன் போட்டியை துவக்கி வைத்தார். விஜயலட்சுமி சஞ்சீவிமலையன் கல்வியக பொருளாளர் மாணிக்கராஜ், இயக்குநர் திலகராஜன், சென்னை திடக்கழிவு மேலாண்மை முதன்மை ஆலோசகர் பாண்டி பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் குமார், துணை உடற்கல்வி இயக்குநர் ஜெயபால் செய்தனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15 அணிகள் பங்கேற்றன.

லீக் போட்டி முடிவுகள்

முதல் லீக் போட்டியில் கோவை கற்பகம் பல்கலை அணி 25 ---- 20, 28 -- 26, 25 --16 புள்ளி அடிப்படையில் கோவை என்.சி.பி. கல்லுாரி அணியை வென்றது. 2வது போட்டியில் பொள்ளாச்சி எஸ்.டி.சி., அணி 25 -- 21, 25 - - 11, 25 -- 18 புள்ளி அடிப்படையில் மதுரை அமெரிக்கன் கல்லுாரி அணியை வென்றது. 3வது லீக் போட்டியில் சென்னை சத்யபாமா பல்கலை அணி 25 - - 21, 22 -- 25, 25 -- 17, 23 -- 25, 21 -- 19 புள்ளிகளில் கோவை என்.சி.பி. கல்லுாரி அணியை வென்றது.4வது போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லுாரி அணி 22 -- 25, 17- - 25, 25 -- 18, 25 -- 21, 15 -- 9 புள்ளிகளில் சென்னை லயோலா கல்லுாரி அணியை வென்றது. போட்டிகள் இன்று (மார்ச் 20) நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை