| ADDED : நவ 23, 2025 02:01 AM
மதுரை: மதுரை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தன் இரு மகள்களை கொன்று, தந்தை தற்கொலை செய்து கொண்டார். மதுரை முடக்கத்தானை சேர்ந்தவர் கோபிராஜ், 40. எலக்ட்ரீஷியன். இவருக்கும் இவரது மனைவிக்கும் சில நாட்களாக தகராறு இருந்து வந்தது. இதில், மனைவி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கோபிராஜ், தன் குழந்தைகளுடன் தனியே வீட்டில் இருந்தார். இந்நிலையில், மன வேதனை அடைந்த கோபிராஜ், நேற்று இரவு தன், 10 மற்றும் 5 வயது மகள்களை கழுத்தை நெரித்து கொன்று, அதன்பின், அவரும் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து, கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.