உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசின் அவதுாறு வழக்கு செல்லுார் ராஜூ ஆஜராக உத்தரவு 

அரசின் அவதுாறு வழக்கு செல்லுார் ராஜூ ஆஜராக உத்தரவு 

மதுரை : தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.,சார்பில் 2023 மே 29 ல் மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லுார் கே.ராஜூ, 'தமிழகத்தில் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராய மரணம், கொலை, கொள்ளை நடக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய ஸ்டாலின் அரசை கண்டிக்கிறேன். அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். பொய் வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்தார். நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றியதால், துன்பப்படுகிறோம்,' என பேசினார்.இது அவதுாறு பரப்பும் வகையில் உள்ளதாகவும், செல்லுார் கே.ராஜூ மீது அவதுாறு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் குற்றவியல் அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். செல்லுார் கே.ராஜூ இன்று (ஜன.,11) ஆஜராக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை