உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை : தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்புத் திட்டத்தை குறிப்பிட்ட காலவரம்பிற்குள் முடிக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி மாவட்டம் ஆனந்தவிளை அரசுராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: மழையின்போது தாமிரபரணி ஆற்று நீர் வீணாக வங்களா விரிகுடா கடலில் கலக்கிறது. கால்வாய் அமைத்து திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாக்களுக்கு வெள்ளநீரை கொண்டு வர தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு 2008 ல் ஒப்புதல் அளித்தது.திம்மராஜபுரம் கன்னடியன் கால்வாயில் 2009 ல் பாலம் அமைக்கப்பட்டது. அதை தற்போது வரை சாலையுடன் இணைக்கவில்லை. முதற்கட்ட திட்டப் பணி முழுமையடையவில்லை. பணியை குறித்த காலவரம்பிற்குள் முடிக்காததால் திட்ட மதிப்பீட்டுத் தொகை அதிகரிக்கிறது. மக்கள் பணம் வீணாகிறது. வறட்சி பகுதிக்கு நீர் கிடைக்கவில்லை.தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தி குறிப்பிட்ட காலவரம்பிற்குள் முடிக்க தமிழக நீர்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: இது நான்கு கட்ட திட்டம். மூன்றுகட்டப் பணி முடிந்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் பணி முழுமையடையவில்லை. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர், துாத்துக்குடி, திருநெல்வேலி கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதுபோல் நிலுவையிலுள்ள மற்றொரு வழக்குடன் ஜன.,24ல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை