உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கராத்தே பிரிமியர் லீக் போட்டி

 கராத்தே பிரிமியர் லீக் போட்டி

மதுரை: மதுரையில் மியாகி வேர்ல்டு கோஜூரியு கராத்தே பள்ளியின் சார்பாக மாநில அளவிலான தமிழ்நாடு கராத்தே பிரி மியர் லீக் போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். வயது, பெல்ட் அடிப் படையில் கட்டா, சண்டை பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தன. இதில் திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் கட்டா பிரிவில் வெற்றி பெற்றனர். லிதர்ஷனா ஸ்ரீ, தன்விகா, ஹரிஷ், ஜோதிவேலன், முஹம்மத் தாஜூதீன், தாரிகா, அர்ச்சனா, அத்தாவுல்லா இப்ராஹிம், அஸ்விதா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். சுதீப், திலக்தரன், நவீன் குமார், அஸ்வந்த் 2ம் பரிசும், பிர ணவ், மணிமாறன் 3ம் பரிசு பெற்றனர். தொழில்நுட்ப இயக்குநர் வைரமணி, தலைமை பயிற்சியாளர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் டி.ராஜா, பயிற்சியாளர்கள் முத்து கிருஷ்ணன், அஜய் கிருஷ்ணா வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை