உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  எங்கு கார்த்திகை தீபம் என்பதை உள்ளூர்காரர்கள் முடிவு செய்யட்டும்

 எங்கு கார்த்திகை தீபம் என்பதை உள்ளூர்காரர்கள் முடிவு செய்யட்டும்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக உள்ளுர் காரர்கள் மட்டும் பேசி முடிவு செய்து கொள்ளட்டும் என தி.மு.க., எம்.எல்.ஏ., தளபதி தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் அவர் கூறியதாவது: கார்த்திகை தீபம் சம்பந்தமாக வெளியூர்காரர்கள் திருப்பரங்குன்றம் வந்து குழப்பத்தை ஏற் படுத்துகிறார்கள். உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில்தான் தீபம் ஏற்றுகிறார்கள். மலை உச்சியில் தீபம் ஏற்றி நான் பார்த்ததில்லை. மலை உச்சியில் தீபம் ஏற்ற சொல்ல வெளியூர்க்காரர்களுக்கு உரிமை இல்லை. வெளியூர் காரர்களால் தான் கலவரம் வருகிறது. உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தான் சிறியதாக விளக்கு ஏற்றுவார்கள். அதைத்தான் நாங்கள் சேர்ந்து தீபமாக்கினோம். இதைச் சொல்லி வெளியூர்காரர்கள் போராட்டம் செய்கிற போது உள்ளூர் மக்கள் சிரமம் அடைகிறோம். உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும். தீபம் ஏற்ற வேண்டும் என்றால் உள்ளூர் காரர்கள் மட்டும் ஏற்றுங்கள். திருப்பரங்குன்றத்தில் முஸ்லிம்கள் குறைவுதான். ஹிந்துக்கள் தான் அதிகமாக உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை