உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மாநில ஹாக்கியில் மதுரை மாணவியர்

 மாநில ஹாக்கியில் மதுரை மாணவியர்

திருமங்கலம்: பள்ளிக் கல்வித்துறை சார்பில் மதுரை வருவாய் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டிகள் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில் 19 வயது பிரிவில் கப்பலுார் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி அணியை 4-:0 என்ற கோல் கணக்கிலும், இறுதிப் போட்டியில் மணியஞ்சி உயர்நிலைப் பள்ளி அணியை 4-:0 என்ற கோல் கணக்கிலும் வென்றனர். இதையடுத்து அவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றனர். நவ. 20ல் திருவண்ணாமலையில் நடக்க உள்ள மாநில ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இம்மாணவியரை கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் சுபாஷினி, உடற்கல்வி ஆய்வாளர் வினோத், பள்ளித் தலைமை ஆசிரியர் பிரபாகர், உடற்கல்வி ஆசிரியர் நல்லமாயன், ஹாக்கி பயிற்சியாளர் நடராஜன் உட்பட பலர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி