உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய பாட்மின்டன் போட்டி

தேசிய பாட்மின்டன் போட்டி

மதுரை: தேசிய அளவிலான யோனெக்ஸ் சன்ரைஸ் ஜூனியர் ரேங்கிங் (19 வயதுக்குட்பட்டோர்) ஆடவர், மகளிர் பிரிவு பாட்மின்டன் போட்டிகள் மதுரையில் நடந்தன. மதுரை மாவட்ட பாட்மின்டன் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு பாட்மின்டன் சங்கம் ஏற்பாடுகளை செய்தன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1016 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 5 பிரிவுகளின் கீழ் நடந்த இறுதிப்போட்டி முடிவுகள்: மகளிர் ஒற்றையர் பிரிவில் ராஜஸ்தானின் பாருல் சவுத்ரி 21 - 17, 21 - 10 செட்களில் மேற்குவங்கத்தின் கனிஷ்கா பிஜர்னியாவை வீழ்த்தினார். மகளிர் இரட்டையர் பிரிவில் தமிழக வீராங்கனைகள் அனன்யா, அஞ்சனா மணிகண்டன் ஜோடி 21 - 15, 19 - 21, 21 - 13 செட்களில் ஆந்திராவின் துர்கா இஷா கண்ட்ரூ, டில்லியின் இஷிட்டா நேகி ஜோடியை வீழ்த்தினர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் கர்நாடகாவின் அபிநவ் கார்க் 21 - 11, 21 - 11 செட்களில் ஆந்திராவின் பால பிரணாய் பிரகடாவை வீழ்த்தினார். ஆடவர் இரட்டையர் பிரிவில் தெலுங்கானாவின் அமன் அனீஷ், கேரளாவின் ஆதீஷ் ஸ்ரீனீவாஸ் ஜோடி 21 - 17, 21 - 10 செட்களில் தெலுங்கானாவின் சவுர்யா கிரண், ஆந்திராவின் பாலா பிரணாய் பிரகடா ஜோடியை வீழ்த்தினர். கலப்பு இரட்டையர் பிரிவில் புதுச்சேரி மிதிலேஷ் கிருஷ்ணன், தமிழகத்தின் வர்ணா பிரபுஆனந்த் ஜோடி போட்டியாளர் வராததால் முதலிடம் பெற்றனர். மதுரை பாவோஸ் அகாடமியில் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு பாட்மின்டன் சங்க துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்திய பாட்மின்டன் சங்க (பி.ஏ.ஐ.,) செயலாளர் சஞ்சய் மிஸ்ரா, சங்க மாநில செயலாளர் அருணாச்சலம், மதுரை மாவட்ட தலைவர் பாலசுப்ரமணி ரூ.8 லட்சம் வரையான பரிசுத்தொகை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை