மதுரை: மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி, கல்லுாரிகளில் நேற்று தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டது.தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா ஒரு நடமாடும் வாகனத்தை கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா துவக்கி வைத்தார்.மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் மேற்பார்வையாளர் அருணாச்சலம் தலைமை வகித்தார். தமிழாசிரியர் பாலசுப்ரமணியம் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் நன்றி கூறினார். அமெரிக்கன் கல்லுாரி விழாவில் கூடுதல் கலெக்டருடன், டி.ஆர்.ஓ., சக்திவேல், தேர்தல் நேர்முக உதவியாளர் கண்ணன், கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.திருப்பாலை யாதவர் கல்லுாரியில் ஆர்.டி.ஓ., ஷாலினி தலைமையில் தாசில்தார்கள் சிவகுமார், பழனிகுமார் முன்னிலையில் மாணவர்கள், ஆசிரியர் உறுதிமொழி எடுத்தனர். மாதிரி ஓட்டுச்சாவடி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மதுரை ரயில்வேகோட்ட அலுவலகத்தில் மேலாளர் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துவற்கான வாக்காளர் தினஉறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் செல்வம், கிளைத் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.திருப்பரங்குன்றம் தொகுதியில், முதன்முறை ஓட்டளிக்க உள்ள இளைஞர்களிடம் பிரதமர் மோடி காணொளி காட்சிமூலம் உரையாற்றினார். பா.ஜ., தொகுதி பொறுப்பாளர்கள் ராமதாஸ், ராக்கப்பன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் வேல்முருகன், இளைஞரணி உறுப்பினர் வெற்றிவேல், பொதுச்செயலாளர்கள் ராஜசேகரன், ஆனந்தன், ராமன் பங்கேற்றனர்.கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார். உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் கல்லுாரிச் செயலர் அந்தோணிசாமி, தாசில்தார் சுரேஷ்பிரடரிக் கிளமண்ட், துணைத் தாசில்தார்கள் சுப்பையா, கார்த்திகேயன், கருமாத்துார் வருவாய் ஆய்வாளர் சாந்தலட்சுமி பங்கேற்றனர்.சோழவந்தான் விவேகானந்தா கல்லுாரியில் ஆசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். முதல்வர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி அத்யாத்மானந்த, துணை முதல்வர் கார்த்திகேயன் அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு, தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயசங்கர் முன்னிலை வகித்தனர்.எழுமலையில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில், செயல் அலுவலர் நீலமேகம் முன்னிலையில் வார்டு,, பகுதி சபை கூட்டம் நடந்தது. தாசில்தார் மூர்த்தி தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.