மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி புதுமண பெண் பலி
17 hour(s) ago
தேசியத் தலைவர் படத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
19 hour(s) ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மேலரத வீதி பாம்பலம்மன் கோயில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் காணாமல் உள்ளது. இந்தாண்டு சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தின்போது, இந்தக் கோயிலுக்கும் நடத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பரங்குன்றம் பகுதியில் விஷப்பூச்சிகள், பாம்புகளால் பாதிக்கப்படுவோர், பாம்பலம்மன் கோயிலை வலம்வந்து, அபிஷேகம், பூஜை செய்து தீர்த்தம் குடித்தால் விஷம் கட்டுப்படும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான இக்கோயிலில், 50 ஆண்டுகளுக்கு முன்பு பூஜாரிகளால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2011ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டபோது உப கோயில்களான காசி விசுவநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், சொக்கநாதர் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போதும் இந்த பாம்பலம்மன் கோயிலுக்கு மட்டும் ஏனோ நடத்தப்படவில்லை.பல தலைமுறைகளாக பூஜாரிகள் இக்கோயிலில் பூஜை நடத்தி வருகின்றனர். வருமானம் மிகவும் குறைவு. அப்படியிருந்தும் பூஜாரிகள் தங்கள் சொந்த செலவில் அவ்வப்போது பராமரிப்பு பணிகளை பார்க்கின்றனர். இக்கோயிலில் சேதமடைந்துள்ள மூலவர் மண்டபம், சுற்றுச்சுவரை சீரமைத்து, புதிதாக விமானம் கட்ட வேண்டும்.இந்தாண்டு சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் பாம்பலம்மன் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
17 hour(s) ago
19 hour(s) ago