உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மாநிலங்களின் பெருமை பேசும் கண்காட்சி: காதணி முதல் காலணி வரை அசத்தல்

 மாநிலங்களின் பெருமை பேசும் கண்காட்சி: காதணி முதல் காலணி வரை அசத்தல்

மதுரை: கைவினைப்பொருட்களுக்கான மேம்பாட்டு ஆணையம், மதுரை பெட்கிராட் சார்பில் ராஜா முத்தையா மன்றத்தில் நடக்கும் 'காந்தி சில்ப் பஜார்' கண்காட்சியில் காதணி முதல் காலணி வரை, பல்வேறு மாநிலங்களின் பெருமை பேசும் கலை, கைவினைப் பொருட்கள் பெண்கள், குழந்தைகளை கவர்கின்றன. ஆந்திர மண்பாண்ட கைவினை கலைஞர்கள் உருவாக்கிய மரத்தடி விநாயகர், கிருஷ்ணர், போதிமர புத்தர், கார்த்திகை அலங்கார விளக்குகள் வைக்கும் உருளிகள் வாசலில் வரவேற்கின்றன. தெலுங்கானாவின் காட்டன் சேலைகள், சந்தேரி பிளாக் பிரிண்டட், எம்ராய்டரி சேலை, மேற்குவங்கத்தின் பாசிமணி ஹேண்ட்பேக், வளையல், கொலுசுகள், ரெடிமேட் சுரிதார், ரெடிமேட் பிளவுஸ், கண்ணாடி வேலைப்பாடு ஹேண்ட்பேக், நகைகள், குஜராத்தின் ஹேண்ட் பேக், உத்தர பிரதேசத்தின் பிளாஸ்டிக் பூக்கள், பொக்கே அழகியல் வேலைப்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன. குட்டீஸ் விளையாடும் கர்நாடகாவின் செப்பு சாமான் செட், கீ செயின், மசாஜ் கருவிகள் உள்ளன. எல்லாம் அழகு டில்லியின் 'குரோசெட்' எம்ராய்டரி சேலை, பிளவுஸ், புதுச்சேரியின் மரச் சாமான்கள், அசாமின் மூங்கில் குடை, விசிறி, நாற்காலிகள், லக்னோவின் சிக்கன்காரி சுரிதார் செட், ராஜஸ்தானின் காகித கூழ் தோரணங்கள், மகாராஷ்டிராவின் எம்ராய்டரி சேலைகள், கான்பூர் 'ஹேண்ட் ப்ளாக் பிரிண்டிங்' சுரிதார், உத்தரகாண்டின் ஜர்தோஷி நகைகள், பீகாரின் காட்டன், கலம்காரி வேலைப்பாடு சேலைகள், கர்நாடகாவின் மினி டெரகோட்டா பொம்மைகள் கண்ணைக் கவர்கின்றன. தமிழகத்தின் காட்டன், சுங்குடி காட்டன், பிரின்டட் சேலைகள், வாழை நார் கூடை, பனை ஓலை மாலை, பொக்கே, பர் பொம்மை, மினியேச்சர் அம்மி, ஆட்டுக்கல், இரும்பு அடுப்பு, தோசைக்கல் வகைகள், கன்னியாகுமரியின் பித்தளை விளக்குகள், தோல் காலணிகள், பெல்ட்கள் இடம்பெற்றுள்ளன. நவ. 16 வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி