உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மகளிர் உரிமைத் தொகைக்காக பணியாற்றியவர்களுக்கு இன்னும் சம்பளம் வரல! 4 மாதமாக காத்திருக்கும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்

மகளிர் உரிமைத் தொகைக்காக பணியாற்றியவர்களுக்கு இன்னும் சம்பளம் வரல! 4 மாதமாக காத்திருக்கும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்

மதுரை: மதுரை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணியாற்றிய மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு 4 மாதங்களாகியும் சம்பளம் தரவில்லை.பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செப்.,15ல் அரசு செயல்படுத்தியது. மதுரை மாவட்டத்தில் 6 லட்சம் பேர் பயனாளிகளாக உள்ளனர். இத்திட்டத்தை செயல்படுத்த வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், இல்லம்தேடி கல்வித்திட்ட உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் பணியாற்றினர். இதில் இல்லம்தேடி கல்வி திட்ட உறுப்பினர்கள், சுயஉதவிக் குழு பெண்களுக்கு தினக்கூலியாக ரூ.350 நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு இதுவரை சம்பளம் வழங்கவில்லை.அவர்கள் கூறியதாவது: மகளிர் உரிமைத் திட்ட மையங்களில் 8 நாட்களுக்கும் மேலாக பணியாற்றினோம். இவ்வகையில் ரூ.3 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் கிடைக்க வேண்டும். திட்டம் செயல்பாட்டுக்கு வந்து 4 மாதங்களாகியும் கிடைக்கவில்லை. எங்களுடன் பணியாற்றிய இல்லம்தேடி கல்வி திட்ட உறுப்பினர்களுக்கு வழங்கிவிட்டனர். தாலுகா அலுவலகத்தில் விசாரித்தால் 'மாநகராட்சியில் கேளுங்கள்' என்கின்றனர். சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.மாவட்ட சமூகநலத்திட்ட துணை கலெக்டர் சவுந்தர்யா கூறுகையில், ''அவர்களுக்கான தொகை அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை. வந்த உடன் வழங்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை