கோயில்திருபவித்திர உற்ஸவம்: சுந்தரராஜ பெருமாள் கோயில், அழகர்கோவில், உற்ஸவர் புறப்பாடாகி ஆரிய வாசல் பிரகாரம் சுற்றி, சுந்தரபாண்டியன் மண்டபத்திலுள்ள ஆமைதாங்கி மண்டபத்தில் எழுந்தருளல், சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.திருபவித்திர உற்ஸவம்: ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, மதுரை, காலை, மாலை வேளைகளில் ஹோமங்கள், திவ்ய அலங்காரம், பவளவிழா மண்டபத்தில் எழுந்தருளல், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.ஆடித் திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், பாலம் ஸ்டேஷன் ரோடு, செல்லுார், மதுரை, அன்னதானம், காலை 11:00 மணி, திருவிளக்கு பூஜை, மாலை 6:00 மணி.9ம் ஆண்டு உற்ஸவம்: இருக்கன்குடி மாரியம்மன், முத்துக்கருப்பணசாமி கோயில், சொக்கலிங்க நகர், பைபாஸ் ரோடு, மதுரை, பால்குடம் எடுத்தல், காலை 6:00 மணி, சக்தி கரகம், அக்னிசட்டி எடுத்தல், இரவு 7:00 மணி, படையல் இடுதல், இரவு 10:00 மணி.ஆடி 5ம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு ஸ்வர்ணாம்பிகை ரூபாய் நோட்டு அலங்காரம்: மகாகாளியம்மன், பாலதண்டாயுதபாணி கோயில், அச்சம்பத்து, மதுரை, காலை 8:00 மணி. யோக தட்சிணாமூர்த்தி வள்ளலார் வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், அனுப்பானடி, மதுரை, மாலை 6:30 மணி.ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ராஜ அலங்காரம், அபிஷேகம், சர்க்கரை பொங்கல் நைவேத்யம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.ராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த் லோசனன்சாமி, மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி. பொதுவிவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் சங்கீதா, காலை 11:00 மணி.சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, ஷெனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், சிறப்பு விருந்தினர்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெயகணேஷ், மாலை 6:00 மணி.அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: விராட்டிபத்து மந்தை, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.ஜெமினி சர்க்கஸ்: யு.சி., பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.கண்காட்சிஆடி ஷாப்பிங் திருவிழா - பிராண்டட் ஆடைகள், காலணிகள், உபகரணங்கள், பார்ட்டி ஆடைகள் விற்பனை: துவாராகா பேலஸ், பாண்டிகோயில் பின்புறம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.ஸ்ரீலெதர்ஸ் சுதந்திர தின சிறப்பு கண்காட்சி, விற்பனை: மடீட்சியா அரங்கம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.16வது யுனைடெட் அக்ரிடெக் 2024 - விவசாய கண்காட்சி: ஐடா ஸ்கட்டர், வேலம்மாள் மருத்துவமனை அருகில், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.