உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை: மதுரையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் பள்ளி தேசிய பசுமைப்படை மாணவ மாணவிகளுக்கான சூழல் விழிப்புணர்வு பயிற்சி அரிட்டாபட்டி பறவைகள் சரணாலயம் பல்லுயிர் பாரம்பரிய தளத்தில் துவங்கியது.மதுரை டி.இ.ஓ., சாய்சுப்புலட்சுமி துவக்கி வைத்தார். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் வரவேற்றார். சேதுபதி பள்ளி தலைமையாசிரியர் நாராயணன், இறகுகள் அறக்கட்டளை நிறுவனர் ரவீந்திரன், சூழல் ஆர்வலர்கள் கார்த்திகேயன், சிவராமன் பங்கேற்றனர். பசுமைப் படை மாணவர்கள், ஆசிரியர்கள் பறவை இனங்கள், மரங்கள், தாவரங்கள், குடவரை கோயில், சமணர் படுகை ஆகியவற்றை பார்வையிட்டனர். மதுரைக் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஏற்பாடு செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ