| ADDED : ஏப் 13, 2024 02:13 AM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கண்ணப்பமூலை பகுதி யில், மகிமாலை ஆற்றின்குறுக்கே, மாநில அரசின் பொதுப்பணித்துறை சார்பில் புதிய கதவணை அமைப்பதற்கான கட்டுமான பணி நடைபெறுகிறது. நேற்று, இணைப்பு சுவருக்கான சென்ட்ரிங் அமைக்கும் பணியில், 15 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென மண் சரிந்ததில், வட மாநில தொழிலாளர்கள்நான்கு பேர் சிக்கிக் கொண்டனர். மூன்று பேர் உடனடியாக மீட்கப்பட்டனர்.மண் சரிவின்போது, சென்ட்ரிங் ஷீட்டும் சேர்ந்து விழுந்ததில், கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த, மேற்கு வங்க மாநிலம் சுமர் அலி, 40, என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவல் அறிந்த பொறையார் போலீசார், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுஉள்ளனர்.