உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீற முயன்ற போலீஸ்காரர் கைது

நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீற முயன்ற போலீஸ்காரர் கைது

மயிலாடுதுறை:நள்ளிரவில் வீடு புகுந்து இளம் பெண்ணிடம் அத்துமீற முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கான்ஸ்டபிள் மரிய ஜோசப், 37. சீர்காழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி வீட்டுக்கு அடிக்கடி செல்வார். சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் அங்கு சென்ற மரிய ஜோசப், வியாபாரி வீட்டுக்கு பதிலாக பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து அங்கு துாங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் கூச்சலிட்டதால், பெண்ணின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மரிய ஜோசப்பை சிறைப் பிடித்தனர். தகவலறிந்த சீர்காழி போலீசார் வந்து, மரிய ஜோசப்பை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.இதுகுறித்து இளம் பெண் புகார் அளித்தும் சீர்காழி போலீசார் நடவடிக்கை எடுக்காமல், சமரச முயற்சி செய்தனர்.ஆனால், இளம் பெண் தரப்பில் மறுத்ததோடு, பிரச்னையை எஸ்.பி., மீனாவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். எஸ்.பி., உத்தரவுப்படி சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து, போலீஸ்காரர் மரிய ஜோசப்பை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மரியஜோசப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., மீனா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ