மேலும் செய்திகள்
போக்சோவில் கைதான போலீஸ்காரர் டிஸ்மிஸ்
20-Nov-2025
வி.ஏ.ஓ., கொலையில் 2 திருநங்கையர் கைது
10-Nov-2025
நாகப்பட்டினம் : நாகை அடுத்த தெற்கு பொய்கை நல்லுாரைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 38. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல, மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய தன் ஆடுகளை, வீட்டின் வாசலில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தார்.நள்ளிரவு நேரத்தில் அப்பகுதிக்கு காரில் வந்த வாலிபர்கள், காரை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு, மணிவண்ணன் கட்டி வைத்திருந்த மூன்று ஆடுகளை திருடி, காரில் ஏற்றி தப்பினர்.காலையில் ஆடுகளை காணாமல் அதிர்ச்சியடைந்த மணிவண்ணன், வேளாங்கண்ணி, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், மர்ம நபர்கள் காரில் வந்து ஆடுகளை திருடிச் செல்லும் 'சிசிடிவி' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில், ஆடு திருடுபவர்களின் முகம் நன்றாக தெரிகிறது.இதுகுறித்து மணிவண்ணன் கூறுகையில், ''திருடு போன மூன்று ஆடுகளும் ஜமுனாபாரி என்ற உயர் வகையை சேர்ந்தவை. ஒவ்வொன்றும் தலா 50,000 ரூபாய் மதிப்புள்ளது,'' என்றார்.
20-Nov-2025
10-Nov-2025