உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தற்செயல்விடுப்பு எடுத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் மன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழனியப்பன், சங்கர், அருட்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன், வீராசாமி, அங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முருக செல்வராசன், ராமு ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.கடந்த, 2021-ல், தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு அச்சுறுத்தலில் இருந்து விலக்களித்து, தமிழக அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், பள்ளி கல்வித்துறை அரசாணை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அரசாணை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். அரசு துறைகளில் தொழில் நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுனர்கள் உள்ளிட்டோரின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.பகுதிநேர ஆசிரியர்கள், பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.கற்பித்தல் பணி பாதிப்புநாமக்கல் மாவட்டத்தில், வருவாய்த்துறையில் மொத்தம் உள்ள, 1,150 பேரில், 353 பேர் பணிக்கு வரவில்லை. மீதமுள்ள, 774 பேர் பணிக்கு வந்தனர். அதனால், பெரிய அளவில் பணிகள் பாதிக்கவில்லை. இதேபோல், பள்ளி கல்வித்துறையில், 300 ஆசிரியர்கள, தொடக்க கல்வித்துறையில், 550 ஆசிரியர்கள் என, மொத்தம், 850 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் கற்பித்தல் பணி வெகுவாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை