உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இறைச்சி கடையில் சிலிண்டர் திருடிய இருவர் கைது

இறைச்சி கடையில் சிலிண்டர் திருடிய இருவர் கைது

ப.வேலூர்: ப.வேலூர் அருகே, கோழி இறைச்சி விற்பனை கடையில், காஸ் சிலிண்டர் திருடிய இருவரை, போலீஸார் கைது செய்தனர். ப.வேலூர் அருகே ஜேடர்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி (31), அதே பகுதியில் பிராய்லர் கோழிக் கடை வைத்துள்ளார். மாலை வேளையில், சில்லி சிக்கன் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் மாலை, கடையை அடைத்து விட்டு முத்துசாமி வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்த போது, கடையின் மேற்கூரையை பிரித்து, உள்ளிருந்த காஸ் சிலிண்டர் திருடப்பட்டிருந்தது. அதுகுறித்து, ஜேடர்பாளையம் போலீஸில், முத்துசாமி புகார் செய்தார்.போலீஸார் நடத்திய விசாரணையில், ஜேடர்பாளையத்தை சேர்ந்த தண்டபாணி (30), பல்லாபாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (35) ஆகியோர் காஸ் சிலிண்டரை திருடி, விற்க முயன்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த காஸ் சிலிண்டரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை