உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காலாவதி பொருட்கள்பறிமுதல் செய்து அழிப்பு

காலாவதி பொருட்கள்பறிமுதல் செய்து அழிப்பு

குமாரபாளயைம்: குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில், காலவதி பொருள் விற்பனையை தடை செய்வது சம்மந்தமான ஆய்வு நடத்தப்பட்டது. நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி தலைமையில், சுகாதார ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் நகராட்சி எல்லையில் உள்ள டீக்கடை, மளிகை கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட டீத் தூள், உற்பத்தி, காலாவதி தேதி குறிப்பிடாத உணவுப் பொருள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இது போல் தரம் குறைந்த மற்றும் உற்பத்தி, காலாவதி தேதி குறிப்பிடாத பொருள் விற்பனை செய்வது தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி