எலச்சிபாளையம் : எலச்சிபாளையம் யூனியன், கோக்கலை கிராமம், எளையாம்பா-ளையத்தை சேர்ந்த ராஜா என்பவர், கடந்த ஜன., 18 முதல், 10 ஆண்டுகளுக்கு, கல்குவாரி இயங்க குத்தகை அனுமதி பெற்-றுள்ளார். தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள், 1959 விதி, 36ன் படி, கல்குவாரியை சுற்றி, 300 மீட்டர் சுற்றளவிற்கு அங்கீக-ரிக்கப்பட்ட வீடுகள், வீட்டுமனைகளும், 500 மீட்டர் சுற்றளவில் அரசு ஆழ்துளை கிணறு, 50 மீட்டர் சுற்றளவில் மின்கம்பி மற்றும் தார்ச்சாலை இருந்தால், கல்குவாரி குத்தகை அனுமதி வழங்கக்கூடாது என, அரசு சட்டவிதிகள் உள்ளன.ஆனால், அனுமதியளிக்கப்பட்டுள்ள அந்த கல்குவாரியை சுற்றி, 300 மீட்டருக்குள் அரசு சார்பில் வழங்கிய பசுமை வீடு, வீடுகள், வீட்டுமனைகள், அரசு ஆழ்துளை கிணறு, மின்கம்பி, தார்ச்சாலை உள்ளது. இதுசம்பந்தமாக, வருவாய்துறை அதிகாரி-களே சான்று வழங்கியுள்ளனர்.சட்டத்திற்கு புறம்பாக, கல்குவாரி இயங்க அனுமதி அளித்துள்-ளதால், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளன. இதனால், குத்தகை அனுமதியை நிரந்தரமாக ரத்துசெய்-யக்கோரி, நேற்று காலை, 10:00 மணியளவில் எளையாம்பாளை-யத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது தோட்டத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 62 பேரை போலீசார் கைதுசெய்து, வையப்பமலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்-தனர். போராட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.