உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விசைத்தறி தொழிலாளர்களின் உடமைகள் ஒப்படைப்பு

விசைத்தறி தொழிலாளர்களின் உடமைகள் ஒப்படைப்பு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த வால்ராசம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில், அங்கேயே தங்கி வேலை செய்யும், 8 விசைத்தறி தொழிலாளர்கள் குடும்பத்துடன் கடந்த, 6ல் வெளியேறினர்.அவர்கள், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,வை சந்தித்து, விசைத்தறி கூடத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றவில்லை. நாங்கள் அங்கு நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. இதனால் நாங்கள் வெளியே செல்கிறோம். எங்களது உடமைகளையும், குழந்தைகளின் பள்ளி புத்தகத்தையும் மீட்டுத்தரவேண்டும். நாங்கள் வாங்கிய பணத்தை தவணை முறையில் காட்டி விடுகிறோம். பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என மனு கொடுத்தனர்.இதையடுத்து, குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேலு, சம்பந்தப்பட்ட விசைத்தறி உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, நேற்று காலை விசைத்தறி தொழிலாளர்களை வால்ராசம்பாளையம் பகுதிக்கு வரவழைத்து, வீட்டில் இருந்து உடமைகளை மீட்டு தொழிலாளர்களிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை