உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் நெடுஞ்சாலை அருகே அமைய வேண்டும்

ராசிபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் நெடுஞ்சாலை அருகே அமைய வேண்டும்

ராசிபுரம், : ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை, நெடுஞ்சாலை ஒட்டி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழு சார்பில், நுாற்றுக்கணக்-கானோர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- ராசிபுரத்தில் இயங்கி வரும் புதிய பஸ் ஸ்டாண்ட், 30 ஆண்டுக-ளுக்கு முன்பு கட்டப்பட்டது. பெருகிவரும் மக்கள் தொகை, வாகன அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த நகராட்சி கூட்டத்தில் நகர எல்லையை விரிவுபடுத்தி புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க தீர்-மானம் நிறைவேற்றப்பட்டது. இதை வரவேற்கிறோம். அவ்வாறு அமையும் புதிய பஸ் ஸ்டாண்ட், தேசிய நெடுஞ்சா-லையை ஒட்டியவாறு அமைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் வியாபார தேவை, கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ளதாக அமையும். இவ்வாறு கூறப்பட்டி-ருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ