நாமக்கல், : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லுாரிகளில், முத-லாமாண்டு வகுப்பு துவக்க விழா, நேற்று துவங்கியது. இதில், மாணவ, மாணவியருக்கு பூங்கொத்து, இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.நாமக்கல் - திருச்சி சாலையில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவியர் படிக்கின்றனர். நடப்பு, 2024-25ம் கல்வியாண்டில், 13 இளநிலை பாடப்பிரிவு-களில், 970 இடங்கள் நிரப்புவதற்கான மாணவியர் சேர்க்கை, மே, 29ல் துவங்கியது. மொத்தமுள்ள, 970 இடங்களில், 669 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதம், 301 இடங்கள் காலியாக உள்ளன. அதற்காக விண்ணப்பிக்க, மூன்று நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமையில், கல்லுாரிக்கு வந்த முதலாமாண்டு மாணவியரை, இரண்டாமாண்டு மாணவியர் பூச்செண்டு கொடுத்தும், கைகளை தட்டியும் உற்சாகமாக வரவேற்றனர்.முதல்வர் கோவிந்தராசு, கல்லுாரியில் மாணவியர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கிய-துடன், 'நன்றாக படித்து, கல்லுாரிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தினார்.* குமாரபாளையம் அரசு கலைக் கல்லுாரியில், இளநிலை பாடப்பிரிவுகளுக்கான முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா, கல்-லுாரி முதல்வர் ரேணுகா தலைமையில், நேற்று துவங்கியது. இதில் மாணவ, மாணவியருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்-பளித்தனர்.தொடர்ந்து, அவர் கூறுகையில், ''கல்லுாரியில் சேர்ந்து படிக்க இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், வரும், 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கலந்தாய்வு, ஜூலை, 8ல் நடக்கும்,'' என்றார்.