மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
ராசிபுரம், ராசிபுரம் அருகே ஒரே இடத்தில், 15 நாய்கள் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், குருக்கபுரம் ஊராட்சி கொழிஞ்சிப்பட்டி கிராமத்தில் உள்ள மயானம் அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் பெண் தொழிலாளர்கள் குட்டை அமைத்து வருகின்றனர். நேற்று இப்பகுதிக்கு வந்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மயானம் பகுதியில் ஆங்காங்கே, 15 நாய்கள் இறந்து கிடந்தன. உடல்களில் ஈ மொய்த்திருந்தது. உடல்களில் இருந்து துர்நாற்றமும் வீசத்தொடங்கியது. நேற்று முன்தினம் இப்பகுதியில் பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும்போது, நாய்கள் எதுவும் இறக்கவில்லை. வேறு எங்காவது நாய்களை கொன்று, இங்கே வந்து வீசி சென்றார்களா அல்லது நாய்களுக்கு மருந்து வைத்து அவைகள் இங்கே வந்து இறந்தனவா என்று தெரியவில்லை.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025