உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / செல்லாண்டியம்மன் கோவிலில் 2ம் ஆண்டு ஜெய துர்கா யாகம்

செல்லாண்டியம்மன் கோவிலில் 2ம் ஆண்டு ஜெய துர்கா யாகம்

மோகனுார்;மோகனுார் தாலுகா, எஸ்.வாழவந்தியில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, இரண்டாம் ஆண்டு ஜெய துர்கா யாகம் நேற்று நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, விநாயகர் வழிபாடு, புண்யாகம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, மூல மந்திர ஹோமம், திரவ்ய அபிஷேகம், பூர்ணாகுதி, சக்தி கலசம் புறப்பாடு, கலசாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, பால், தயிர், இளநீர், மஞ்சள், கரும்பு சாறு உட்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதையடுத்து, மலர் அலங்காரம், அர்ச்சனை செய்து மலர் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை