| ADDED : மார் 22, 2024 02:06 AM
எருமப்பட்டி:திருச்சியில் இருந்து சேலத்திற்கு கொண்டு சென்ற 4.20 கோடி ரூபாய் ஆவணங்கள் காட்டியதும் விடுவிக்கப்பட்டது.லோக்சபா தேர்தலையொட்டி, எருமப்பட்டி அருகே மேட்டுப்பட்டி சோதனை சாவடியில் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, திருச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஏ.டி.எம்., வாகனத்தை சோதனை செய்தனர். அதில் ரூ.4.20 கோடி ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தில் இருந்த பணியாளர்களிடம் பணத்திற்காக ஆவணங்களை கேட்டனர். பின்னர் அவர்கள் ஆவணங்களை காட்டியதும் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை விடுவித்தனர்.இதேபோல், அலங்காநத்தம் அருகே பறக்கும் படையினர் வாகன தணிக்கையின் போது, துறையூரில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த முட்டை வாகனத்தை சோதனை செய்தனர். அதில் ஆவணங்கள் இல்லாததால் 54 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.தி.மு.க.,வினர் பிரசாரம்குமாரபாளையம், மார்ச் 22-நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் மதுரா செந்தில் அறிவுறுத்தல் படி, குமாரபாளையம் வடக்கு தி.மு.க., சார்பில் வார்டு வாரியாக தேர்தல் பிரசாரம் நடந்தது.இதில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பேசியதாவது: முதல்வரின் மக்கள் நலத்திட்டங்களை, பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்ய அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.இதையடுத்து, தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. மாற்றுக்கட்சியினர் பலர் தி.மு.க.,வில் சேர்ந்தனர்.