| ADDED : ஆக 06, 2024 02:33 AM
குமாரபாளையம், குமாரபாளையம், பெராந்தர் காடு பகுதியை சேர்ந்தவர் மாதப்பன், 60. இவர், நேற்று காலை, 8:00 மணியளவில், தான் வளர்த்து வரும் பசு மாட்டை, சரஸ்வதி தியேட்டர் சாலையில் உள்ள காலி இடத்திற்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். மேய்ச்சல் முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது பசுமாடு உரசியது. அப்போது, மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும், மாட்டை பிடித்து வந்த மாதப்பன் மீதும் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த மின்வாரியத்தினர், மின் இணைப்பை துண்டித்தனர்.பசுமாடு சுருண்டு விழுந்து உயிரிழந்ததை கண்டு, அதன் உரிமையாளர் மாதப்பனும், அவரது மனைவியும் கதறி அழுத சம்பவம், அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியது. உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.