உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 63 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

63 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

நாமக்கல்:தொழிலாளர் துறை உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) முத்து மேற்பார்வையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால், தேசிய விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று, விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.மொத்தம், 71 கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 63 நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்பளம் வழங்கவும் அல்லது மாற்று விடுப்பு வழங்க அனுமதி பெறாமலும், தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது.அதையடுத்து, 63 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை