| ADDED : ஜூலை 26, 2024 02:59 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில், மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்-கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், சிறு குறு, நடுத்தர தொழில்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. எனவே, புதிய மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு தமிழகத்தில் அமல்படுத்த உள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாலை எலச்சிபாளையம் பஸ்நிறுத்தத்தில் மா. கம்யூ-னிஸ்டு கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலை-மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயற்குழு உறுப்பினர் சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மூத்த நிர்வாகி சுந்தரம், கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், ஒன்றிய குழு உறுப்பி-னர்கள் மாரிமுத்து, ரமேஷ், ஈஸ்வரன், பாலகிருஷ்ணன், மோட்டார் சங்க மாவட்ட பொருளாளர் சத்தி வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.