உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மனநல காப்பகத்தில் மோதல் கொடுமுடி ஆசாமி உயிரிழப்பு

மனநல காப்பகத்தில் மோதல் கொடுமுடி ஆசாமி உயிரிழப்பு

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில், காட்டூர் சாலையில், 'அணைக்கும் கரங்கள்' என்ற மனநல காப்பகம், 26 ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த காப்பகத்தை ஜாய், 52, நிர்வகித்து வருகிறார். இங்கு, 30 குழந்தைகள் உட்பட, 60க்கும் மேற்பட்டோர் பராமரிப்பில் உள்ளனர்.காப்பகத்தில் இருந்த ஈரோடு மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த தங்கராஜ், 58, தஞ்சாவூரை சேர்ந்த கைரூல் ஆஸ்மிக், 45, இருவருக்கும் நேற்று காலை தகராறு ஏற்பட்டது. இருவரும் தாக்கிக் கொண்டதில், கீழே விழுந்த தங்கராஜ், தலையில் பலத்த காயமடைந்தார். காப்பக பணியாளர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் அவர் இறந்து விட்டது தெரிந்தது. ராசிபுரம் போலீசார் விசாரித்தனர்.அனைவரையும் தாக்கும் சுபாவம் கொண்ட தங்கராஜ், கைரூல் ஆஸ்மிக்கை தாக்கியபோது, எதிர்பாராதவிதமாக விழுந்ததில் காயமடைந்து இறந்திருக்கலாம் என, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை