உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மோட்டார் வைத்து குடிநீர் எடுத்தால் குறைந்தபட்சம் ரூ.10,000 அபராதம்

மோட்டார் வைத்து குடிநீர் எடுத்தால் குறைந்தபட்சம் ரூ.10,000 அபராதம்

ப.வேலுார்:'முறைகேடாக மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுத்தால் குறைந்தபட்சம், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் திருநாவுக்கரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வீடு, ஹோட்டல், வணிக நிறுவனங்கள் என, 3,348 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 'பெரும்பாலான வீடுகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பதால், சுல்தான்பேட்டை, தெற்கு நல்லியம்பாளையம், வடக்கு நல்லியம்பாளையம், சந்தை ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில்லை' என, ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் திருநாவுக்கரசிடம், கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, செயல் அலுவலர் திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கை:கோடைகாலம் துவங்கி வெயில் கொளுத்தி வருவதால், குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. ப.வேலுார் நகரில் உள்ள பொதுமக்கள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள், தங்களது வீடுகளில் சட்டத்துக்கு புறம்பாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சும் அமைப்பு நிறுவியிருந்தால், உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும்.தவறும்பட்சத்தில், குறைந்தபட்சம், 10,000 ரூபாய் அபராதம் விதித்து, மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும். மேலும், அந்த வீட்டில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். பறிமுதல் செய்த மின் மோட்டார்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி