உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வையப்பமலையில் 43 பவுன் திருட்டு

வையப்பமலையில் 43 பவுன் திருட்டு

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை அன்னை நகரை சேர்ந்த தம்பதியர் கோபால், 58, மாது, 50; கூலித்தொழிலாளிகள். இவர்களும், இவர்களது மூத்த மகள் சத்யா, 36, அவரது கணவர் பெங்களூர் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பூபதிராஜா, 40, மற்றொரு மகள் சபர்ணா, 27, ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, கோபால் வீட்டுக்குள்ளும், மற்றவர்கள் ஹாலிலும் கதவு திறந்த நிலையில் படுத்து துாங்கியுள்ளனர். இரவு, 12:30 மணிக்கு, முகமூடி அணிந்து வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள், பீரோவில் இருந்த, 43 பவுன் நகை, 50,000 ரூபாய் ரொக்கம், 2 மொபைல் போன் என, அனைத்தையும் திருடிக்கொண்டு தப்ப முயன்றனர். சத்தம் கேட்டு எழுந்த கோபால், திருடன், திருடன் என கத்தியுள்ளார். அப்போது, திருடர்கள் கொண்டு வந்த கடப்பாரை, தண்ணீர்பாட்டில், மஞ்சள் நிற டி-சர்ட் ஆகியவற்றை அங்கேயே வீசிவிட்டு, டூவீலரில் காத்திருந்த நபருடன் தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல்படி, நேற்று காலை, திருச்செங்கோடு டி.எஸ்.பி., (பொ) வின்சென்ட், எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ.,க்கள் பொன்குமார், ரஞ்சித்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில், கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை