உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நெடுஞ்சாலை அருகே வழிந்தோடும் குடிநீர்

நெடுஞ்சாலை அருகே வழிந்தோடும் குடிநீர்

ராசிபுரம்;ராசிபுரம் நகராட்சிக்கு காவிரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பிரதான பைப்புகள் ஆட்டையாம்பட்டி, வெண்ணந்துார், அத்தனுார் வழியாக ராசிபுரம் நகராட்சிக்கு வருகிறது.இந்நிலையில், ராசிபுரம் அடுத்த ஏ.டி.சி., டிப்போ அருகில் தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே பைப்பில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கீழே செல்கிறது. தினமும், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. உடைப்பு பெரிதாகி தண்ணீர் அதிகம் வெளியேறும் முன் பைப்பை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை