உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெண் லாரி மோதி பலி

பெண் லாரி மோதி பலி

எலச்சிபாளையம்: மின்னாம்பள்ளியில், சாலையை கடக்க முயன்ற பெண் லாரி மோதி பலியானார்.சேலம், செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் காளியண்ணன், 43. அதே பகுதியை சேர்ந்தவர் அவரது மாமன் மகள் ஜீவா, 53. கடந்த ஆறு மாதங்களாக, வேலை நிமித்தமாக எலச்சிபாளை-யத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்றுமுன்-தினம் இரவு 10:30 மணியளவில், ஆண்டகளூர்கேட்டில் பணியை முடித்துவிட்டு, எக்ஸல் சூப்பர் மொபட்டில் இருவரும் வந்துள்ளனர்.வையப்பமலை அடுத்த, மின்னாம்பள்ளி பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது, ஜீவா சிறுநீர் கழிப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது, திருச்செங்கோடு ஆண்டிபாளையம் தனியார் சத்துணவு மில் லாரி, ஜீவா மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி டிரைவர் செல்வத்தை, 59, எலச்சிபாளையம் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி