உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு விரைவு பஸ் மரத்தில் மோதியதில் 10 பேர் காயம்

அரசு விரைவு பஸ் மரத்தில் மோதியதில் 10 பேர் காயம்

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அருகே, அரசு விரைவு பஸ் மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் டிரைவர் உள்பட, 10 பேர் காயமடைந்தனர். சென்னையில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பஸ் ராசிபுரம் நோக்கி சென்று கொணடிருந்தது. பஸ்சை டிரைவர் லோகநாதன், 40, ஓட்டி வந்தார். ஆத்துார் பிரதான சாலை வழியாக, நாமகிரிப்பேட்டையை தாண்டி, நேற்று காலை வந்தது. அப்போது, லேசாக துாறல் மழையும் பெய்து கொண்டிருந்தது. ராசிபுரத்திற்கு முன், காக்காவேரி பகுதியில் வரும்போது, முன்னால் எதிர் திசையில் லாரி ஒன்று வேகமாக வந்தது. இதையடுத்து லாரி மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் போட்டுள்ளார். லேசான மழை பெய்து கொண்டிருந்ததால், பிரோக் சரியாக பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் இருந்த புளியமரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் டிரைவர் லோகநாதன், சினோகா, 22, ஜீவாஸ்ரீ, 22, செல்வபாரதி, 31, சக்திவேல், 25, லாவண்யா, 23 உள்பட, 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சிறுகாயம் ஏற்பட்டது. அனைவரும் அருகில் உள்ள ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று வீடு திரும்பினர். புளியமரத்தில் மோதிய பஸ்சை, கிரேன் உதவியுடன் மீட்டனர். காலையில் நடந்த விபத்தால், ஆத்தூர் பிரதான சாலையில், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை