உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தட்டிக்கேட்டவரை அடித்த 4 பேர் கைது

தட்டிக்கேட்டவரை அடித்த 4 பேர் கைது

மோகனுார்: மோகனுார் தாலுகா, ஒருவந்துார் பஞ்.,க்குட்பட்ட வடுகபட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 44; இவரது, 16 வயது நிரம்பிய மக-ளிடம், அதே பகுதியை சேர்ந்த, நான்கு பேர் தகராறு செய்துள்-ளனர். இதுகுறித்து தட்டிக்கட்ட கோவிந்தராஜை, நான்கு பேரும் தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் திட்டி, கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக, மோகனுார் போலீசார் வழக்குப்பதிந்து, கோவிந்தராஜை தாக்கிய கூலி தொழி-லாளி ராகுல், 23, மற்றும் 18, 17, 16 வயதுடைய சிறுவர்கள் உள்-பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ