உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதர் மண்டி கிடக்கும் சுகாதார வளாகம்

புதர் மண்டி கிடக்கும் சுகாதார வளாகம்

வெண்ணந்துார், வெண்ணந்துார் யூனியன், ஓ.சவுதாபுரம் பஞ்., பகுதியில் தொட்டியப்பட்டி செல்லும் சாலையோரம் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த மக்கள் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர். சுகாதார வளாகத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இதனால் இந்த சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதர்மண்டி கிடப்பதால், சுகாதார வளாகம் இருப்பதே தெரியாத அளவு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், புதர் மண்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை