உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமகிரிப்பேட்டை அரசு பள்ளி கோ-கோ போட்டியில் சாதனை

நாமகிரிப்பேட்டை அரசு பள்ளி கோ-கோ போட்டியில் சாதனை

நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் வட்ட அளவிலான, கோ-கோ விளையாட்டு போட்டி, புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. பெண்கள் பிரிவில் நடந்த போட்டியில், 7 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும், புதுப்பட்டி அரசு பள்ளி அணியும் மோதின. இதில், நாமகிரிப்பேட்டை அரசு பள்ளி மாணவியர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை, தலைமை ஆசிரியர் சத்தியவதி, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ