உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நாமக்கல்: நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்-ளியில், 1978 முதல், 1980 வரை பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள், 45 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இப்பள்-ளியில் படித்து, காவல்துறை, கோவை வேளாண் பல்கலை, குடிநீர் வாரியம், சார்பதிவாளர் அலுவ-லகம், வங்கி, பொதுத்துறை நிறுவனங்கள், டாக்டர் பணி, ஆசிரியர் பணி உள்ளிட்ட முக்கிய அரசு பதவிகளில் பணியாற்றி வந்தவர்கள், தற்-போது, 60 ஆண்டு வயதை கடந்ததால் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களின் சேவையை பாராட்டி சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். பலர், தனியார் பள்ளி நிர்வாகிகள், தனியார் நிறுவன உரிமையாளர்கள், லாரி, கோழிப்பண்ணை, நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட தொழி-லதிபர்களாகவும் உள்ளனர்.முன்னாள் மாணவர்கள், 45 ஆண்டுகளுக்கு பின் சந்தித்ததால், தங்களின் பசுமையான நினைவு-களை, ஒருவருக்கொருவர் பகிர்ந்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, 'குரூப்' போட்டோ எடுத்துக்கொண்-டனர். அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்-பட்டது. ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன், செயலாளர் சுப்ரம-ணியன், பொருளாளர் பாண்டுரங்கன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை