உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம்

உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம்

நாமக்கல்; 'மாவட்டத்தில் மானியத்து டன் கூடிய உழவர் நல சேவை மையங்கள் அமைக்க, தகுதியுள்ள வேளாண் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் தோட்டக்க-லைத்துறை துணை இயக்குனர் புவனேஷ்வரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தோட்டக்கலைத்துறை மூலம் முதல்வர் உழவர் நல சேவை மையங்கள் தொடங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சேவை மையங்கள் அமைக்க தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் ஆகிய துறைகளில் பட்டய படிப்பு அல்லது பட்ட படிப்பு முடித்த இளைஞர்கள் விண்-ணப்பிக்கலாம். இந்த சேவை மையங்கள், 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்-கப்படவுள்ளன. இதற்கு, 30 சதவீதம் மானியமாக, 3 லட்சம், 6 லட்சம் ரூபாய் வரை, அரசு சார்பில் வழங்கப்படும்.இந்த மையங்களின் மூலம் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி வினியோகம், மண் மற்றும் நீர் மாதிரி ஆய்வு, நுண்ணீர் பாசனம், ட்ரோன் சேவை, உழவன் கடன் அட்டை, கால்நடை தீவனம் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பழுது பார்க்கும் பட்டறை போன்ற அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்-படும். இத்திட்டத்தில் சேர விரும்பும் விண்ணப்ப-தாரர்கள் வங்கி நடைமுறைகளை பின்பற்றி, கடன் ஒப்புதல் பெற்ற பின் மானியம் கோரி, https://www.tnagrisnet.tn.gov.inஎன்ற இணையத-ளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.நாமக்கல் மாவட்டத்தில், இத்திட்டத்தின்கீழ் இன்னும், 3 இலக்குகள் மட்டுமே எஞ்சியுள்ளன. எனவே, முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்-பங்கள் தேர்வு செய்யப்படும். தகுதியுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம். விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்கு-னரை, 83444-62367 என்ற மொபைல் எண்ணிலும் அல்லது நாமக்கல் தோட்டக்கலை துணை இயக்-குனர் அலுவலகத்தை நேரிலோ அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை