உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கலைச்சங்கமம் நிகழ்ச்சி: தேர்வு செய்யப்பட்ட கலைக்குழுவினருக்கு பரிசு, கேடயம் வழங்கல்

கலைச்சங்கமம் நிகழ்ச்சி: தேர்வு செய்யப்பட்ட கலைக்குழுவினருக்கு பரிசு, கேடயம் வழங்கல்

நாமக்கல்: கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட கலைக்குழுவினருக்கு, பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.நாமக்கல் மாவட்டத்தில், தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில், 966 கலைஞர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாரியத்தில் பதிவுபெற்ற, 165 உறுப்பினர்களுக்கு, 5.30 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வி, திருமணம், கண்ணாடி, இயற்கை மரணத்திற்கான நிதி உதவி என நலதிட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட கலை மன்றத்தின் மூலம், 796 கலைஞர்களுக்கு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2002-03 முதல், 2021-22ம் ஆண்டிற்கான மாவட்ட கலை விருதுகள், 100 கலைஞர்களுக்கும், விருதுக்குரிய தொகை, பொற்கிழி, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.மேலும், கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தின் மூலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செவ்வியல் மற்றும் நுண்கலையில் தனிநபர் பதிவாக, ஐந்து பேரும், கிராமிய கலைக்குழு பதிவாக, 26 குழுவினர்களும் பதிவு செய்துள்ளனர். கலை பண்பாட்டு இயக்ககம் சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின், நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில், கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.அதில் தேர்வு செய்யப்பட்ட கலைக்குழுவினருக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல்லில் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நான்கு கலைக்குழுவினருக்கு, தலா, 30,000 ரூபாய் வீதம், மொத்தம், 1.20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும், கேடயமும் வழங்கப்பட்டது.நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, விழா ஒருங்கிணைப்பாளர் பிரபு, கலைஞர்கள், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை