மோகனுார், தேசிய, மாநில அளவிலான போட்டிகளுக்கு, அணியாரபுரம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், மாநில அளவிலான பேஸ்பால் தேர்வு போட்டி, திருச்சி மாவட்டம், தோளூர்பட்டி தனியார் கல்லுாரியில் நடந்தது. அதில், மோகனுார் அடுத்த அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி திவிஜா, 14 வயது பிரிவிலும், 19 வயது பிரிவில், மாணவி கன்சிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், வரும், 2026, ஜன.,ல் டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்குபெறுவர்.அதேபோல், செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான வாள்சண்டை போட்டியில், 19 வயது பிரிவில், இப்பள்ளி மாணவி ரூபாஸ்ரீ முதலிடம், லிசாஸ்ரீ இரண்டாமிடம், 17 வயது பிரிவில், மாணவியர் முத்துமதி, அனிதா, மணிமாலா, அக்ஷயா, 14 வயது பிரிவில், தேஜாஸ்வினி, அகல்யா, ரேணுகா ஆகியோர், மூன்றாமிடம் பிடித்தனர்.மாணவர்கள், 14 வயது பிரிவில், பூபேஷ், விக்னேஷ், கிஷோர் ஆகியோர், மூன்றாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற, 12 பேரும், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டி, வரும், 2026 ஜன., 6 முதல், 9 வரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கிறது.மேலும், வட்ட அளவிலான எறிபந்து போட்டியில், 14, 17, 19 வயது பிரிவு மாணவர்கள் முதலிடம், பூப்பந்து போட்டியில், 14 வயது பிரிவில், மாணவர்கள் முதலிடம், 17 வயது பிரிவில் மாணவர்கள் இரண்டாமிடம், கபடி போட்டியில், 17 வயது பிரிவில், மாணவர்கள் முதலிடம், 14 வயது பிரிவில், மாணவியர் முதலிடம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியரையும், உடற்கல்வி ஆசிரியர்கள் பெரியசாமி, செல்வராஜ் ஆகியோரையும், தலைமையாசிரியர் புனிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.