உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் : குமாரபாளையம் மா.கம்யூ., சார்பில், தமிழகத்திற்கு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு அளித்திடு; 'நீட்' தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை செய்திடு; கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடு என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆனங்கூர் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், நகர குழு நிர்வாகிகள் காளியப்பன், கந்தசாமி, மாதேஸ்வரன் கிளை செயலர்கள் சரவணன், மோகன், வெங்கடேசன், முன்னாள் நகர செயலர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை