உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 16 வயது சிறுவனை தாக்கிய நபர் கைது

16 வயது சிறுவனை தாக்கிய நபர் கைது

ப.வேலுார், கந்தம்பாளையம் அருகே, வாழ்நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர், 16 சிறுவன். பிளஸ் 1 படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த, மற்றொரு, 16 வயது சிறுவன். இவரும், பிளஸ் 1 படிக்கிறார். இருவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று கந்தம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்த, 16 வயது சிறுவனை, மற்றொரு, 16 வயது சிறுவனின் தந்தை மணிகண்டன் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை