உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் சிறப்பான செயல்பாடு நாமக்கல் மாவட்டத்திற்கு தேசிய அளவில் 4ம் இடம்

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் சிறப்பான செயல்பாடு நாமக்கல் மாவட்டத்திற்கு தேசிய அளவில் 4ம் இடம்

நாமக்கல் : 'ஜல் ஜீவன் மிஷன்' குடிநீர் திட்டத்தில், அதிகளவில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக, நாமக்கல் மாவட்டத்திற்கு, தேசிய அளவில், 4ம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.சென்னை தலைமை செயலகத்தில், மாவட்ட கலெக்டர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை வகித்தார். தொடர்ந்து, 2022 அக்., 1 முதல், 2023 செப்., 30 வரையிலான காலகட்டத்தில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, தேசிய அளவில், 293.14 புள்ளிகள் பெற்று, 4ம் இடம் பிடித்த, நாமக்கல் மாவட்டத்தை பாராட்டி, நாமக்கல் கலெக்டர் உமாவிடம் விருது வழங்கினார்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 15 ஒன்றியங்களில், 322 கிராம பஞ்.,களுக்குட்பட்ட, 2,520 குக் கிராமங்களுக்கும், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த, 14 மற்றும் 15-வது நிதிக்குழு திட்டங்கள் மூலம், மொத்தம் உள்ள மூன்று லட்சத்து, 52,086 வீடுகளில், இதுவரை, மூன்று லட்சத்து, 47,996 வீடுகளுக்கு, தனி நபர் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 4,090 வீடுகளுக்கும், வரும், 30க்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, தேசிய அளவில், 4ம் தர வரிசை விருது நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.'இதுபோன்ற அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, நாமக்கல் மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ