உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிண்டிகேட் வங்கியில்வாடிக்கையாளர் கூட்டம்

சிண்டிகேட் வங்கியில்வாடிக்கையாளர் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் சிண்டிகேட் வங்கிக் கிளையில், வாடிக்கையாளர் கூட்டம் நடந்தது.ஓய்வு பெற்ற உதவிக் கல்வி அலுவலர் ஜோதிலிங்கம் தலைமை வகித்தார். வங்கியின், நாமக்கல் கிளை முதுநிலை மேலாளர் ராஜேந்திரன் பங்கேற்றுப் பேசினார்.கூட்டத்தில், வங்கியின் எஸ்.எம்.எஸ்., இணையதள வசதி உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் தெரிவித்த ஆலோசனைகளும் ஏற்கப்பட்டது.வங்கி மேலாளர் ஜெகதீஸ்வரி, கோழிப்பண்ணை உரிமையாளர் தேவராஜன், முட்டை வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மணி, சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி