உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கம்ப்யூட்டர் பயிற்சி கோரிசெவிலியர் சங்கம் மனு

கம்ப்யூட்டர் பயிற்சி கோரிசெவிலியர் சங்கம் மனு

நாமக்கல்: 'கிராம சுகாதார செவிலியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சியும், துணை சுகாதார மையங்களுக்கு கம்ப்யூட்டரும் வழங்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டரிடம், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மனு அளித்துள்ளனர்.அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட விபரம்:பொது சுகாதாரத் துறையில், 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களைய வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சியும், துணை சுகாதார மையங்களுக்கு கம்ப்யூட்டரும் வழங்க வேண்டும். தடுப்பூசி தினத்தன்று, துணை சுகாரதார மையங்களுக்கு, அரசு தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை