உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க., சேர்மன் வேட்பாளருக்குமத்திய மந்திரி வேட்புமனு தாக்கல்

தி.மு.க., சேர்மன் வேட்பாளருக்குமத்திய மந்திரி வேட்புமனு தாக்கல்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி தி.மு.க., சேர்மன் வேட்பாளருக்கு பதிலாக, மத்திய மந்திரி காந்திச்செல்வன் மனுதாக்கல் செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் பதவிக்கு, தி.மு.க., சார்பில், கட்சியின் நகரச் செயலாளரான நடேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், நில அபகரிப்பு வழக்கில் கைதாகி, நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.அதையடுத்து, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, அவர் மனுதாக்கல் செய்ய வருவார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர். எனினும், அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை. அவர் சார்பில், கட்சியின் மாவட்டச் செயலாளரான அமைச்சர் காந்திச்செல்வன், கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று நகராட்சி தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.நகராட்சி சேர்மன் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நகரச் செயலாளர் நடேசன் வராதது, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தியது. மேலும், போலீஸ் கைது நடவடிக்கைக்கு பயந்து, நகரச் செயலாளர் நடேசன் வேறெங்காவது பதுங்கியிருக்கலாம் எனவும், கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை